You must be logged in to take this course → LOGIN | REGISTER NOW
20
வியாபாரம் சார்ந்த அறிவினை கற்று அதனூடாக வெற்றிகரமான ஒரு வியாபாரியாக உங்களால் மாற முடியும்.
வெற்றிகரமாக வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப்பாடநெறி ஆலிம்களை கருத்தில்கொண்டு ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சொந்த வியாபாரம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு பயமாக இருக்கின்றதா ?
எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தெரியவில்லையா ?
வெற்றிகரமான முறையில் வியாபாரம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு வியாபார குடும்ப பின்னணி கொண்டவராக நீங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை.
வியாபாரம் சார்ந்த அறிவினை கற்று அதனூடாக வெற்றிகரமான ஒரு வியாபாரியாக உங்களால் மாற முடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
பாடநெறி வடிவமைப்பாளர்:
சிறிய வியாபாரம் முதல் பெரிய கம்பெனிகள் வரை வியாபாரங்களுக்கு ஆலோசனை வழங்குபவராக ஒரு தசாப்த காலத்திற்கு மேல் அனுபவத்துடனும், பல வியாபாரங்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திய அனுபவத்துடனும் இணைந்து, வியாபார முகாமைத்துவம் என்ற துறையில் பல்வேறு உயர்கல்விகளை பூர்த்தி செய்த வளவாளரின் ஊடாக கற்றுக்கொள்ள உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
--------------------------------------------------------------------------------------------------------------------
அறிமுகம்
வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தல் என்ற இந்தப்பாடநெறி மூலம், வெற்றிகரமான ஒரு வியாபாரத்தை உருவாக்க தேவையான அறிவு மற்றும் திறன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தப்பாடநெறி வியாபாரத்தின் அடிப்படைக் கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது.
உங்களுடைய வியாபார எண்ணத்தினை எவ்வாறு ஒரு வெற்றிகரமான வியாபாரமாக மாற்றுவது, அதற்குத் தேவையான படிமுறைகள் என்பன இங்கு கற்றுத்தரப்படுகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------
பாடநெறியின் இலக்குகள்
1. வியாபாரம் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான அடிப்படை அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொடுத்தல்.
2. உங்களுடைய மார்க்க சொற்பொழிவுகளுடன் இணைத்து வியாபாரத்தினை ஆரோக்கியமான முறையில் ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை அறிவு மற்றும் திறன்கள் சம்பந்தமாக சமூகத்திற்கு வழிகாட்டல்களை வழங்குபவர்களை உருவாக்குதல்.
--------------------------------------------------------------------------------------------------------------------
இலாபநோக்கற்ற நிறுவனம் ஒன்றினை ஆரம்பிக்க இருக்கின்றீர்களா ?
இந்தப் பாடநெறியில் கற்பிக்கப்படுகின்ற விடயங்கள் ஓர் இலாபநோக்கற்ற நிறுவனத்தினை ஆரம்பிப்பதற்கு மிகவும் உதவியாக அமையும். ஆகவே நீங்கள் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிப்பதை நோக்காக கொண்டு இல்லாவிட்டாலும் இந்தப் பாட நெறியின் ஊடாக எவ்வாறான முறையில் இலாபநோக்கற்ற நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பது என்ற ஒரு பூரணமான அறிவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் வியாபாரம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்?
- தனிப்பட்ட நிதி சுதந்திரம்: ஒரு வெற்றிகரமான வியாபாரம் உங்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும். உங்கள் சொந்த வருமானத்தை ஈட்டுவதன் மூலம், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், உங்களுடைய மார்க்க செயல்பாடுகளை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும் உதவியாக அமையும்.
- வியாபாரத்தினை அனுபவத்தின் ஊடாக கற்றல்: நவீன கால வியாபாரங்கள் பல்வேறு வகையான புதிய சவால்களை எதிர்கொள்கின்றது. அதே நேரம் பல்வேறு வகையான புதிய வியாபார முறைகள் உருப்பெற்று இருக்கின்றன. ஆகவே உங்களுடைய வியாபார அனுபவம் மற்றும் மார்க்க அறிவினை இணைத்து எமது சமூகத்திற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு உதவியாக அமையும்.
- வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்: புதிய வியாபாரங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. உங்கள் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
- சமூகத்திற்கு பங்களித்தல்: உங்கள் வியாபாரம் மூலம், உங்கள் சமூகத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
- தனிப்பட்ட திருப்தி: ஒரு வெற்றிகரமான வியாபாரத்தை உருவாக்குவது ஒரு பெரிய சாதனை மற்றும் தனிப்பட்ட திருப்தியை தரும்.
------------------------------------------------------------------------------------------------------------------
15 Credits பாடநெறி
Diploma in Business Management (வணிக முகாமைத்துவ டிப்ளமோ)
நீங்கள் டிப்ளமோ பாடநெறியை தொடர்பவராக இருந்தால் Entrepreneurship Foundation பாடம் உங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
--------------------------------------------------------------------------------------------------------------------
பாடநெறியின் கால அளவு
முழுமையா 15 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
கட்டணம்
30,000 LKR ( $100)
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 75 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தபட்சம் LKR 2500).
கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- Assignment (வகுப்பீடு) 100Marks
- Distinction: Outstanding performance (70 or above Marks)
- Merit: Above-average performance (60-69 Marks)
- Pass: Satisfactory performance (50-59 Marks)
- Fail: Unsatisfactory performance (below 50Marks)
--------------------------------------------------------------------------------------------------------------------
🎖சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பாடநெறியில் சேர்ந்து, உங்கள் வியாபார கனவுகளை நனவாக்க தயாராகுங்கள்!
Course Currilcum
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:25:00
-
- வியாபாரத்தினை ஆரம்பித்தல் 01 00:06:00
- வினாக்கள் 00:20:00
- வியாபாரத்தினை ஆரம்பித்தல் 02 00:19:00
- வினாக்கள் 00:20:00
- வணிக எண்ணங்கள் மற்றும் வாய்ப்புகள் 01 00:17:00
- வினாக்கள் 00:30:00
- வணிக எண்ணங்கள் மற்றும் வாய்ப்புகள் 02 00:09:00
- வினாக்கள் 00:30:00
- வணிக எண்ணங்கள் மற்றும் வாய்ப்புகள் 03 00:23:00
- வினாக்கள் 00:30:00
- வணிக எண்ணங்கள் மற்றும் வாய்ப்புகள் 04 00:11:00
- வினாக்கள் 00:20:00
- வணிக நிதி 01 00:14:00
- வினாக்கள் 00:25:00
- வணிக நிதி 02 00:29:00
- வினாக்கள் 00:30:00
- வணிக நிதி 03 00:14:00
- வினாக்கள் 00:25:00
- வணிக நிதி 04 00:18:00
- வினாக்கள் 00:30:00
- வணிக நிதி 05 00:13:00
- வினாக்கள் 00:20:00
- சமூக சேவை அமைப்பு 00:39:00
- வினாக்கள் 00:05:00
- முடிவுரை 00:09:00